கடலூரில்தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணர்வு பேரணிமாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்


கடலூரில்தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணர்வு பேரணிமாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 22 Feb 2023 12:15 AM IST (Updated: 22 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்.

கடலூர்


தமிழ்நாட்டில் பிப்ரவரி 21-ந் தேதி (அதாவது நேற்று) முதல் 28-ந் தேதி வரை தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழா விழிப்புணர்வு பேரணி கடலூரில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகன் தலைமை தாங்கி, பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அன்பரசி, பெரியார் கலைக்கல்லூரி முதல்வர் ஜோதி வெங்கடேஸ்வரன், தமிழ் துறை உதவி பேராசிரியர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கடலூர் டவுன்ஹாலில் இருந்து தொடங்கிய பேரணியானது கடலூர்-நெல்லிக்குப்பம் சாலை வழியாக அரசு தொழிற்பயிற்சி நிலையம் வரை சென்றது. பேரணியில் பெரியார் அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள், கடலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் கலந்து கொண்டு தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழா தொடர்பான பதாகைகளை கைகளில் ஏந்தியபடி சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ராஜேந்திரன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் வெங்கடாஜலபதி மற்றும் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story