தமிழ் அறிஞர் கா.சு. பிள்ளை பிறந்த நாள் விழா
நெல்லையில் தமிழ் அறிஞர் கா.சு. பிள்ளை பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
திருநெல்வேலி
தமிழறிஞர் கா.சுப்ரமணியபிள்ளை என்ற கா.சு.பிள்ளையின் பிறந்தநாள் விழா நேற்று நெல்லையில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவரது நினைவு தூணில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்ட தமிழ் நலக் கழகத்தினர் செயலாளர் பாப்பாக்குடி செல்வமணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் கா.சு. பிள்ளையின் பேரன் சுப்பிரமணியன், கணபதிசுப்பிரமணியன், கவிஞர்கள் பிரபு பொன்மயில், முத்துசாமி, ஓவியர் வள்ளிநாயகம், முன்னாள் மண்டல தலைவர் வெங்கடசுப்பிரமணியன், சுதர்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story