தற்காலிக பணியாளர்களை ராஜஸ்தானை பின்பற்றி தமிழக அரசும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் -அன்புமணி ராமதாஸ்
தற்காலிக பணியாளர்களை ராஜஸ்தானை பின்பற்றி தமிழக அரசும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
சென்னை,
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
ராஜஸ்தான் அரசில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் 1,10,279 ஒப்பந்த பணியாளர்கள் பணி நிலைப்பு செய்யப்பட உள்ளனர். அதற்கான விதிகளுக்கு அம்மாநில முதல்-அமைச்சர் அசோக் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார். இது வரலாற்று சிறப்பு மிக்க சமூகநீதி நடவடிக்கை.
ஒடிசாவில் 57 ஆயிரம் தற்காலிக பணியாளர்கள் பணி நிலைப்பு செய்யப்பட்டு உள்ளனர். ராஜஸ்தானில் பணி நிலைப்பு குறித்த தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள சுமார் 1 லட்சம் தற்காலிக பணியாளர்கள் தங்களுக்கான சமூக நீதியை எதிர்பார்க்கின்றனர். தற்காலிக பணியாளர்களை 10 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த ஊதியத்தில் பணி செய்ய கட்டாயப்படுத்துவது நியாயமல்ல. அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். அதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் தற்காலிக பணியாளர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.