தமிழ்நாட்டிற்கு நேர்மையான, எளிமையான, தூய்மையான காமராஜ் மாடல் தேவை - ஜி.கே.வாசன் பேட்டி


தமிழ்நாட்டிற்கு நேர்மையான, எளிமையான, தூய்மையான காமராஜ் மாடல் தேவை - ஜி.கே.வாசன் பேட்டி
x

தமிழ்நாட்டிற்கு நேர்மையான, எளிமையான, தூய்மையான காமராஜ் மாடல் தேவை என்று ஜி.கே.வாசன் கூறினார்.

சென்னை,

தமிழகத்தில் பொற்கால ஆட்சி தந்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் 48-வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி தமாகா தலைமை அலுவலகத்தில் பெருந்தலைவர்காமராஜரின் திருவுருவப்படத்திற்கு, ஜி.கே.வாசன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் ஜி.கே.வாசன் கூறுகையில்,

காமராஜரின் பொற்கால ஆட்சியின் அடிப்படையிலே, தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளது.வளமான தமிழ்நாட்டிற்கு நேர்மையான, எளிமையான, தூய்மையான காமராஜ் மாடல் தேவை.

கிராம வளர்ச்சியை மேம்படுத்துவதில் மெத்தனப்போக்கு தெரிகிறது. கிராமங்களுக்கான நிதியை முறையாக விடுவித்து அதன் வளர்ச்சியை கண்காணிக்க வேண்டியது அரசின் பொறுப்பு.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story