தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் காத்திருப்பு போராட்டம்


தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் காத்திருப்பு போராட்டம்
x

சோளிங்கரில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

ராணிப்பேட்டை

சோளிங்கர் வட்டார கல்வி அலுவலர் கே.வி.பாபுவை கண்டித்தும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகம் (தொடக்கக் கல்வி) முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர். மாநில தலைவர் மணிமேகலை தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் அறிந்ததும் முதன்மை கல்வி அலுவலர் உஷா நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, 10 நாட்களில் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதன்பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Related Tags :
Next Story