தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க வசதி இன்றி தவிக்கும் தஞ்சை கல்லூரி மாணவர்


தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க வசதி இன்றி தவிக்கும் தஞ்சை கல்லூரி மாணவர்
x

தமிழக, தென்இந்திய அளவில் 10 பதக்கங்ளை குவித்துள்ள தஞ்சை கல்லூரி மாணவர், தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க போதிய வசதி இன்றி தவிக்கிறார். அவருக்கு கருணை உள்ளம் கொண்டவர்கள் உதவுவார்களா? என எதிர்பார்ப்புடன் உள்ளார்.

தஞ்சாவூர்

தமிழக, தென்இந்திய அளவில் 10 பதக்கங்ளை குவித்துள்ள தஞ்சை கல்லூரி மாணவர், தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க போதிய வசதி இன்றி தவிக்கிறார். அவருக்கு கருணை உள்ளம் கொண்டவர்கள் உதவுவார்களா? என எதிர்பார்ப்புடன் உள்ளார்.

கல்லூரி மாணவர்

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள பார்வதி நகரை சேர்ந்தவர் ஆரோன்பென்கர். இவர் தஞ்சையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். துப்பாக்கி சுடுதல் வீரரான இவர் நேர் எறிதட்டு சுடுதல் (டிராப் சூட்டிங்- பறக்கும் தட்டு சுடுதல்) பிரிவில் தமிழக அளவிலும், தென் இந்திய அளவிலும் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு 10 பதக்கங்களை குவித்துள்ளார்.

10-ம் வகுப்பு படிக்கும் போதே சுப்பாக்கி சுடுதலில் ஆர்வம் கொண்டவராக திகழ்ந்த ஆரோன்பென்கர், இதற்காக நாகை மாவட்ட துப்பாக்கி சுடுதல் சங்கத்தில் உறுப்பினராகி முறையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பயிற்சி பெறத்தொடங்கினார். அப்போது நடந்த மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கமும் பெற்றுள்ளார். தற்போதும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தஞ்சையில் இருந்து புதுக்கோட்டைக்கு சென்று பயிற்சி பெற்று வருகிறார்.

தேசிய போட்டிக்கு தகுதி

இதுவரை 5 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலப்பதக்கத்தை பெற்றுள்ள ஆரோன்பென்கர், தற்போது தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். தேசிய அளவிலான போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 20-ந்தேதி முதல், நவம்பர் மாதம் 20-ந்தேதி வரை டெல்லியில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள ஆரோன்பென்கர் போதிய வசதி இல்லாததால் பங்கேற்க கருணை உள்ளம் கொண்டவர்கள் யாராவது உதவுவார்களா? என்ற எதிர்பார்ப்புடன் உள்ளார்.

இது குறித்து ஆரோன்பென்கர் கூறுகையில், எனக்கு மெர்சி என்ற தாயாரும், சோபியா என்ற சகோதரியும் உள்ளனர். நாங்கள் அனைவரும் தாத்தா அமிர்தராஜ், பாட்டி வளர்மதி ஆகியோரின் பராமரிப்பில் இருந்து வருகிறோம். தாத்தா பள்ளியில் அலுவலக ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டார். அவர் தான் தனக்கு பெரிதும் உதவி புரிந்து வருகிறார். தற்போது தேசிய போட்டியில் பங்கேற்க தகுதி பெற்று இருந்தாலும், அதில் பங்கேற்க போதுமான பண வசதி இல்லாததால் இன்னும் டிக்கெட் கூட முன்பதிவு செய்ய முடியாத நிலையில் உள்ளேன்.

உதவி செய்வார்களா?

டெல்லியில் போட்டிகள் ஒருமாதம் நடைபெறுவதால் அங்கு தங்குவதற்கும், போக்குவரத்து செலவு, துப்பாக்கி சுடுவதற்கான தோட்டா வாங்குவதற்கு ஆகும் செலவு என அதிக நிதி தேவைப்படுகிறது. தோட்டா வாங்குவதற்கு மட்டும் ரூ.70 ஆயிரம் வரை செலவு ஆகும். ஆனால் அந்த அளவுக்கு போதிய வசதி இல்லாததால் என்ன செய்வது என்று தெரியவில்லை. யாராவது கருணை உள்ளம் கொண்டவர்கள் உதவி செய்தால் என்னால் போட்டியில் பங்கேற்பதோடு, பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்க்க முடியும். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே எனது லட்சியம் என்றார்.


Next Story