தஞ்சை பாலியல் வன்கொடுமை வழக்கு - மேலும் இரண்டு பேர் கைது


தஞ்சை பாலியல் வன்கொடுமை வழக்கு - மேலும் இரண்டு பேர் கைது
x

கோப்புப்படம்

தஞ்சை பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண், இரண்டு வாரங்களுக்கு முன் சில வாலிபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கை போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். இதனிடையே இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் தற்போது மேலும் இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருந்த 17 வயது சிறுவன் மற்றும் வேல்முருகன் என்பவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். ஏற்கனவே நான்கு பேர் கைதான நிலையில், தற்போது மேலும் இருவர் சிக்கி உள்ளதால், இந்த வழக்கில் இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story