ரூ.75 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி


ரூ.75 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி
x

அம்பை அருகே ரூ.75 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது.

திருநெல்வேலி

அம்பை:

அம்பை ஒன்றியம் வாகைகுளம் மன்னார் கோவில் பஞ்சாயத்து முள்ளிபள்ளி குளம்ரோடு கிராம இணைப்பு சாலை திட்டத்தின் கீழ் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அம்பை யூனியன் சேர்மன் பரணி சேகர் தலைமை தாங்கி பணியை தொடங்கி வைத்தார். இதில் பஞ்சாயத்து தலைவர்கள் சுப்புலட்சுமி நந்தகுமார், ஜோதி கல்பனா பூதத்தான், யூனியன் என்ஜினீயர் நாதன், வாகைகுளம் பஞ்சாயத்து துணை தலைவர் சாமுவேல், ஊராட்சி செயலாளர் தங்கப்ப பிரசன்னா, தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story