தார் சாலை அமைக்க வேண்டும்
சேறும் சகதியுமானதை சரிசெய்து, தார் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி 1-ல் அமைந்துள்ள தியேட்டர் எதிரே உள்ள தார் சாலை பழுதடைந்து, மண் சாலையாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. மழையால் சேறும் சகதியுமாக மாறி நடந்து செல்லவும் இருசக்கர வாகனங்களில் செல்லவும் சிரமமாக உள்ளது. போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக இருப்பதை சரி செய்ய திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளரிடம் பல முறை பேசியும், மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சேறும் சகதியுமான சாலையில் தார்சாலை அமைத்துத் தர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Related Tags :
Next Story