தார்ச்சாலை அமைக்க வேண்டும்
வள்ளாலகரம் ஊராட்சி விவேகானந்தர் தெருவில் தார்ச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
மயிலாடுதுறை
மயிலாடுதுறை ஒன்றியம் வள்ளாலகரம் ஊராட்சி விவேகானந்தர் தெருவில் 25-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த தெரு சாலை 4 தெருக்களுக்கு இணைப்பு சாலையாகவும் உள்ளது. தற்போது இந்த தெருவில் உள்ள சாலை மண்சாலையாகவே உள்ளது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் மனு அளித்து வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சுமார் 300 மீட்டர் தூரம் உள்ள விவேகானந்தர் தெருவில் 150 மீட்டர் தூரம் மட்டும் மாவட்ட ஊராட்சி நிதியிலிருந்து தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சாலை மண்சாலையாகவே உள்ளது. எனவே விடுபட்ட விவேகானந்தர் தெருவில் உள்ள 150 மீட்டர் சாலையை உடனே தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story