டாஸ்மாக் கடையை மூடக்கூடாது


டாஸ்மாக் கடையை மூடக்கூடாது
x

திருப்பூர் அருகே மேற்கு பதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கூடாது என்று கலெக்டரிடம் மதுப்பிரியர்கள் முறையிட்டனர்.

திருப்பூர்


திருப்பூர் அருகே மேற்கு பதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கூடாது என்று கலெக்டரிடம் மதுப்பிரியர்கள் முறையிட்டனர்.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பூர் அருகே மேற்குபதியை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் மக்கள் வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், 'மேற்குபதியில் டாஸ்மாக் கடை கடந்த 4 ஆண்டுகளாக யாருக்கும் இடையூறு இல்லாமல் செயல்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி எதுவும் அருகில் இல்லை. குடியிருப்பு பகுதி அருகில் இல்லை. இந்தநிலையில் ஒரு சில நபரின் அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக எந்த தொந்தரவும் இல்லாத டாஸ்மாக் கடையை மூட முயற்சி செய்கிறார்கள்.

இந்த கடையை மூடினால் விவசாய கூலி தொழிலாளர்கள், மதுப்பிரியர்கள் 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குன்னத்தூர் மற்றும் பெருமாநல்லூரில் உள்ள மதுபான கடைகளுக்கு செல்ல வேண்டும். டாஸ்மாக் கடையை மூடினால் போலி மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயம் விற்கும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிடும் அச்சம் உள்ளது. எனவே டாஸ்மாக் கடையை மூடாமல் தற்போதைய இடத்திலேயே நிரந்தரமாக செயல்பட ஏற்பாடு செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளனர்.

டாஸ்மாக் கடைகளால் தொந்தரவு, அவற்றை மூட வேண்டும் என்று பொதுமக்கள் மனு அளித்து வரும் நிலையில், டாஸ்மாக் கடையை மூடக்கூடாது என்று மனு கொடுத்தவர்களால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story