டாஸ்மாக் கடை ஊழியர்களை தாக்கி பணம் கொள்ளை
பரமக்குடி அருகே டாஸ்மாக் கடை ஊழியர்களை தாக்கி பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
பரமக்குடி,
பரமக்குடி அருகே டாஸ்மாக் கடை ஊழியர்களை தாக்கி பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
டாஸ்மாக் கடை ஊழியர்கள் மீது தாக்குதல்
பரமக்குடி அருகே உள்ள பொட்டிதட்டி கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வரும் எஸ்.அண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த பூமி (வயது 47) முருகானந்தம் (47)ஆகிய இருவரும் சம்பவத்ன்று இரவு டாஸ்மாக் கடையை பூட்டிவிட்டு வெளியே வந்தனர்.
. அப்போது அங்கு அடையாளம் தெரியாத 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து கடையை திறந்து மதுபாட்டில்கள் எடுத்து தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு இவர்கள் இருவரும் கடையை பூட்டி விட்டோம். திறக்க முடியாது என கூறியுள்ளனர்.
உடனே அந்த 3 பேரும் பின்பக்கம் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து பூமி, முருகானந்தம் இருவரையும் தாக்கியுள்ளனர். பின்பு அவர்களிடம் இருந்த கடை சாவியை பறித்து டாஸ்மாக் கடைக்குள் நுழைந்துள்ளனர்.
பணம் கொள்ளை
கடைக்குள் இருந்த ரூ.20 ஆயிரத்து 700 ரொக்க பணம் மற்றும் சில மது பாட்டில்களையும் எடுத்துக்கொண்டு அதே மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். மேலும் பூமி என்பவரின் செல்போனையும் பறித்து சென்றுள்ளனர்.
அந்த மர்ம நபர்கள் தாக்கியதில் பூமிக்கு இடது பக்க தோளிலும் முருகானந்தத்திற்கு காலிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் பரமக்குடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.