மதுவில் விஷம் கலந்து குடித்து டாஸ்மாக் ஊழியர் தற்கொலை


மதுவில் விஷம் கலந்து குடித்து டாஸ்மாக் ஊழியர் தற்கொலை
x

மதுவில் விஷம் கலந்து குடித்து டாஸ்மாக் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை

கீரனூர் அய்யப்பா நகரை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 45). இவரது மனைவி அகிலா (42). இவர் ஆவூரில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த நந்தகுமார் வீட்டின் மாடியில் மதுவில் குருனை மருந்து (விஷம்) கலந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கீரனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நந்தகுமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீரனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலையரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story