ரெயில் முன் பாய்ந்து டாஸ்மாக் ஊழியர் தற்கொலை
பாளையங்கோட்டை அருகே ரெயில் முன் பாய்ந்து டாஸ்மாக் ஊழியர் தற்கொலை செய்து கொண்டாா்.
பாளையங்கோட்டை அருகே ரெயில் முன் பாய்ந்து டாஸ்மாக் ஊழியர் தற்கொலை செய்து கொண்டாா்.
டாஸ்மாக் ஊழியர்
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் கிராம சாவடி தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 48). இவர் முக்காணி டாஸ்மாக் கடையில் உதவி விற்பனையாளராக வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கணேசன் பாளையங்கோட்டை அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் நெல்லை -திருச்செந்தூர் ரெயில்வே தண்டவாளம் பகுதிக்கு சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் முன்பு பாய்ந்தார். இதில் அவர் உடல் சிதறி பலியானார்.
போலீசார் விசாரணை
தகவல் அறிந்த சிவந்திபட்டி போலீசார் மற்றும் நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கணேசனின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்ததால் கணேசன் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்துள்ளார். அதையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.