நெகமம் அருகே டாஸ்மாக் ஊழியர் மர்ம சாவு
நெகமம் அருகே டாஸ்மாக் ஊழியர் மர்மமாக இறந்து கிடந்தார்.
நெகமம்
நெகமம் அருகே டாஸ்மாக் ஊழியர் மர்மமாக இறந்து கிடந்தார்.
டாஸ்மாக் ஊழியர்
நெகமம் அடுத்த செங்குட்டைப்பாளையத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 38). டாஸ்மாக் ஊழியர். இவரது மனைவி கலைச்செல்வி (30). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் மோகன்ராஜ், கலைச்செல்விக்கு இடையே கடந்த ஒரு ஆண்டுக்கு முன் குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்தனர்.
நேற்று முன்தினம் காலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற மோகன்ராஜ் மீண்டும் வீடு திரும்ப வில்லை. அதனால் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினார்கள். இந்தநிலையில் நேற்று காலை உறவினர்கள் ேமாகன்ராஜ் வீட்டை திறந்து பார்த்தனர்.
மர்மமாக இறந்து கிடந்தார்
அப்போது அங்கு மோகன் ராஜ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுபற்றி உடனடியாக நெகமம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகிய ரேகைகளை சேகரித்தனர். இதேபோல் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் வீட்டில் இருந்து ேமாப்பம் பிடித்தப்படி சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
போலீஸ் விசாரணை
இதையடுத்து போலீசார், மோகன்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டில் டாஸ்மாக் ஊழியர் மர்மமாக இறந்து கிடந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.