டாஸ்மாக் சுமைபணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


டாஸ்மாக் சுமைபணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

டாஸ்மாக் சுமைபணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர்

கரூர் டாஸ்மாக் சுமைபணி தொழிலாளர்கள் சம்மேளனம் சி.ஐ.டி.யு. சார்பில் தொழில்பேட்டையில் உள்ள டாஸ்மாக் கிடங்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் விநாயகம் தலைமை தாங்கினார். சரவணன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் லிகர் பெட்டி ஒன்றுக்கு ரூ.5.50-ல் இருந்து ரூ.8-ஆகவும், பீர் பெட்டி ஒன்றுக்கு ரூ.4-ல் இருந்து 8-ஆகவும், பெட்டிக்குள் பெட்டி ஒன்றுக்கு ரூ.6.50-ல் இருந்து 9-ஆகவும், வெளிநாட்டு மதுபான பெட்டி ஒன்றுக்கு ரூ.50-ல் இருந்து ரூ.60-ஆகவும், குடோன் விட்டு குடோன் மாற்றும் பெட்டி ஒன்றுக்கு ரூ.10-ல் இருந்து ரூ.15 ஆகவும் இறக்கு கூலி உயர்வை காலதாமதம் இன்றி வழங்க வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.


Next Story