மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி டாஸ்மாக் மேலாளர் பலி


மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி டாஸ்மாக் மேலாளர் பலி
x
தினத்தந்தி 13 March 2023 12:15 AM IST (Updated: 13 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி டாஸ்மாக் மேலாளர் பலியானார். இது தொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி டாஸ்மாக் மேலாளர் பலியானார். இது தொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

டாஸ்மாக் மேலாளர்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த எக்கல் கிராமத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது53). இவர் முத்துப்பேட்டை ஆசாத்நகர் கோரையாற்று கரையோரம் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் மேலாளராக பணியாற்றி வந்தார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் டாஸ்மாக் கடையை பூட்டிவிட்டு மணிவண்ணன் மோட்டார் சைக்கிளில் முத்துப்பேட்டையில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு சென்று கொண்டிருந்தார்.

லாரி மோதியது

முத்துப்பேட்டை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் ஆங்காடு கடைதெரு அருகே சென்ற போது அந்த வழியாக தூத்துக்குடியில் இருந்து நாகையை நோக்கி சென்ற மீன்பாடி லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த மணிவண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மணிவண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

டிரைவர் கைது

மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான நாகை ஓடாச்சேரி தெற்குதெரு பகுதியை சேர்ந்த ஜெகநாதன் மகன் சுரேஷ் என்பவரை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.


Next Story