கூடுதல் விலைக்கு மது விற்றால் குற்றவியல் நடவடிக்கை - டாஸ்மாக் பணியாளர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை


கூடுதல் விலைக்கு மது விற்றால் குற்றவியல் நடவடிக்கை - டாஸ்மாக் பணியாளர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 29 Jun 2023 12:30 AM IST (Updated: 29 Jun 2023 5:51 PM IST)
t-max-icont-min-icon

கூடுதல் விலைக்கு மது விற்றால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் பணியாளர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வதாக புகார்கள் வரப்பெற்றது. இதை தொடர்ந்து நேற்று கலெக்டர் உமா தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் பேசிய கலெக்டர் உமா, டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதலாக வைத்து மது விற்பனை செய்யக்கூடாது. இது தொடர்பான புகார்களை தமிழ்நாடு மாநில வாணிப கழக மாவட்ட மேலாளர் கமலக்கண்ணனிடம் தெரிவிக்கலாம். கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வது குறித்து வாடிக்கையாளர்களிடம் இருந்து வரப்பெறும் புகார்கள் தொடர்பாக, உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைப்பணியாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ் கண்ணன், மாவட்ட மேலாளர் (தமிழ்நாடு மாநில வாணிப கழகம்) கமலக்கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story