டாஸ்மாக் கடை ஊழியர் பணியிடை நீக்கம்


டாஸ்மாக் கடை ஊழியர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 30 Aug 2023 12:15 AM IST (Updated: 30 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணியில், கூடுதல் விலைக்கு மதுவிற்ற டாஸ்மாக் கடை ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் வேளாங்கண்ணியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருபவர் மேஜர் சுந்தரம். இவர் மதுபாட்டில்களுக்கு அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ.10 வசூல் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. இதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மேஜர் சுந்தரம், கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து மேஜர் சுந்தரத்தை பணியிடை நீக்கம் செய்து நுகர்பொருள் வாணிப கழக மாவட்ட மேலாளர் சவுந்தர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.


Next Story