ஞாயிற்றுக்கிழமை டாஸ்மாக் கடைகள் மூடல்


ஞாயிற்றுக்கிழமை டாஸ்மாக் கடைகள் மூடல்
x
தினத்தந்தி 3 Feb 2023 12:15 AM IST (Updated: 3 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

வடலூர் ராமலிங்கம் அடிகளார் நினைவுதினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், மதுபான கடைகளுடன் இணைந்த பார்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்க வேண்டும்.

அன்றைய தினம் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டு உள்ளதால், மதுபானம் விற்பனை செய்யக்கூடாது.

மேலும் மதுபானத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.


Next Story