டாஸ்மாக் கடைகள் இன்று அடைப்பு


டாஸ்மாக் கடைகள் இன்று அடைப்பு
x
தினத்தந்தி 15 Aug 2023 1:15 AM IST (Updated: 15 Aug 2023 1:16 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் இன்று அடைக்கப்படுகிறது.

மதுரை

சுதந்திரதினத்தை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) இந்திய தயாரிப்பு மற்றும் அயல்நாட்டு மதுபானங்களை விற்பனை செய்யும் கடைகள், தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லரை விற்பனைக் (டாஸ்மாக்) கடைகள், மனமகிழ் மன்றங்கள், நட்சத்திர விடுதிகள் மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை விடுதிகளால் நடத்தப்படும் மதுபான கூடங்கள் மற்றும் உயர்ரக மதுபானங்கள் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை அடைக்கப்பட்டு இருக்கும். மது விற்பனை தொடர்பான விதிமீறல்கள் ஏதும் நடைபெறாமல் கண்காணிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலை கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story