மதுரை நகரில் டாஸ்மாக் கடைகள் நாளை அடைப்பு
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி 5-ந் தேதி நடக்கிறது. அதற்கு முந்தைய தினமான 4-ந் தேதி நாளை மதுரை நகரில் உள்ள டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என்று கலெக்டர் அனிஷ்சேகர் அறிவித்து உள்ளார்.

டாஸ்மாக் கடைகள் அடைப்பு
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுதல் விழாவினை முன்னிட்டு நாளை (வியாழக்கிழமை), மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் செயல்படும் அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் (டாஸ்மாக்), மனமகிழ் மன்றங்கள், தங்கும் விடுதியுடன் கூடிய மதுபானக் கூடங்கள், அயல்நாட்டு மதுபான சில்லரை விற்பனை கடைகள் ஆகியவை மூடப்பட்டு இருக்கும்.
கண்காணிக்க உத்தரவு
மேற்படி தினத்தில் மது விற்பனை தொடர்பான விதிமீறல்கள் ஏதும் நடைபெறாமல் கண்காணிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நாளில் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மதுபான சில்லரை விற்பனை எதுவும் நடைபெறாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.