கரூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் டாஸ்மாக் கடைகள் அடைப்பு:கலெக்டர் உத்தரவு
கரூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படுவதாக கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கரூர்
வள்ளலார் நினைவு தினத்தையொட்டி நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) அரசு மதுபான கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பார்கள் மற்றும் மதுபான விடுதிகள், ஓட்டல்கள் உள்ள பார்கள் ஆகியவை அன்றைய தினம் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினம் மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாளை மறுநாள் கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு மதுபான கடைகள் அவற்றுடன் இணைந்த பார்கள், மதுபான உரிமதலங்கள் மூடப்பட்டிருக்கும். அன்றைய தினத்தில் மது விற்பனை ஏதும் நடைபெறாது. வள்ளலார் நினைவு தினத்தில் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story