ருசிகரமான போட்டி: ஒரு கிலோ கோழிக்கறியை 10 நிமிடத்தில் தின்ற வாலிபர்


ருசிகரமான போட்டி: ஒரு கிலோ கோழிக்கறியை 10 நிமிடத்தில் தின்ற வாலிபர்
x

ருசிகரமான போட்டி: ஒரு கிலோ கோழிக்கறியை 10 நிமிடத்தில் தின்ற வாலிபர் ‘சாப்பாட்டு ராமன்’ பட்டம் வென்றார்.

தர்மபுரி,

தர்மபுரி அருகே உள்ள முக்கல்நாயக்கன்பட்டி கிராமத்தில் காணும் பொங்கல் விழாவையொட்டி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும் மாமியார்-மருமகள் கயிறு இழுக்கும் போட்டி போன்றவையும் நடந்தன. இதில் பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதனிடையே இளைஞர்களுக்கு ஒரு கிலோ சில்லி சிக்கன் மற்றும் பிரியாணி சாப்பிடும் 'சாப்பாட்டு ராமன்' போட்டி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றவர்கள் வேகமாக சில்லி சிக்கன் மற்றும் பிரியாணியை சாப்பிட்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். முடிவில் ஒரு கிலோ சில்லி சிக்கனை 10 நிமிடத்தில் வெற்றிவேல் என்ற இளைஞர் சாப்பிட்டு, 'சாப்பாடு ராமன்' பட்டத்தை தட்டி சென்றார். இதேபோல் பிரியாணி சாப்பிடும் போட்டியில் கஜேந்திரன் என்பவர் முதல் பரிசை பெற்றார். அரை கிலோ ஐஸ் கிரீமை 7 நிமிடத்தில் ராஜ்குமார் என்பவர் சாப்பிட்டு வெற்றி பெற்றார். இவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story