வரியினங்களை முறையாக செலுத்தி இழப்பை தவிருங்கள்


வரியினங்களை முறையாக செலுத்தி இழப்பை தவிருங்கள்
x
திருப்பூர்


பனியன் தொழில்துறையினர் வரியினங்களை முறையாக செலுத்தி இழப்பை தவிருங்கள் என்று வணிகவரித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள்.

வரியினங்கள்

திருப்பூர் சைமா சங்க அலுவலக அரங்கில் வணிகவரி சம்பந்தமான விளக்க கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் செயலாளர் கீதாஞ்சலி கோவிந்தப்பன் வரவேற்றார். தலைவர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். இதில் ஈரோடு வணிகவரித்துறை இணை ஆணையாளர் காயத்திரி கிருஷ்ணன் பேசியதாவது:-

வர்த்தகர்கள், தொழில்துறையினர் வரியினங்களை உரிய காலத்துக்குள் செலுத்த வேண்டும். சந்தேகம் இருந்தால் உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். வரி செலுத்தாததால் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்க்க விரைவில் தாமதிக்காமல் வரி செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரிட்டன் தாக்கல் அவசியம்

திருப்பூர் வணிக வரித்துறை துணை ஆணையாளர் முருககுமார் பேசும்போது, 'ஆர்.சி. எடுக்கும் தொழில் நிறுவனத்தினர் ஆண்டுதோறும் ரிட்டன் தாக்கல் செய்வது அவசியம். . 3 பி ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும்.

9 சி மற்றும் 9 படிவத்தையும் தொடர்ந்து தாக்கல் செய்ய வேண்டும். நீங்கள் உரிய முறையில் வரி செலுத்தினாலும், நீங்கள் பொருட்களை விற்பனை செய்யும் மற்றும் பொருட்களை வாங்கும் நிறுவனத்தினரும் ரிட்டன் தாக்கல் செய்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களுக்கும் அபராதம், வட்டி செலுத்தும் நிலை ஏற்படும்' என்றார்.

ஈரோடு வணிகவரித்துறை துணை ஆணையாளர் மதன்குமார் பேசும்போது, 'தமிழக தொழிலாளர்கள் மட்டுமில்லாமல் வெளிமாநில தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கும் தொழிலாக பனியன் தொழில் உள்ளது. அன்னிய செலாவணி அதிகம் கிடைக்கிறது. சரக்குகளை வாகனங்களில் கொண்டு செல்லும்போது நிறுத்தி நாங்கள் சோதனை செய்யும்போது, அதிகம் பேருக்கு ஜி.எஸ்.டி. குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். வரியினங்கள் குறித்து அனைவரும் அறிந்திருக்க வேண்டும்' என்றார்.

முடிவில் துணை தலைவர் பாலசந்தர் நன்றி கூறினார். இதில் சைமா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்திக்கொண்டனர்.

அபராதம்

முன்னதாக சைமா சங்கத்தினர் இணை ஆணையாளரிடம் அளித்த மனுவில், 'ஜாப் ஒர்க் பணிகளுக்காக வாகனங்களில் சரக்குகளை கொண்டு செல்லும்போது நியாயமான, குறைந்தபட்ச ஆவணங்களை கொண்டு செல்லும்போது நிறுத்தி வைப்பதையும், அபாராதம் விதிப்பதையும் தவிர்க்க வேண்டும். ஜாப்ஒர்க் அடிப்படையில் செய்யப்படும் சாயப்பட்டறை கட்ட வேண்டிய வரியில் டி.டி.எஸ்.பிடித்தம் செய்து கட்டப்படவில்லை என பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு அறிக்கை வருகிறது. அதை ரத்து செய்ய வேண்டும். சி படிவம் சமர்ப்பிக்க முடியாத நேரத்தில் 1 சதவீதம் வரி செலுத்தியவர்களுக்கு நிலுவை அறிக்கை கேட்கப்படுவதை தவிர்க்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.


Next Story