வரி விதிப்பு, நிதிக்குழு கூட்டம்
நெல்லை மாநகராட்சி வரி விதிப்பு, நிதிக்குழு கூட்டம் நடந்தது.
திருநெல்வேலி
நெல்லை மாநகராட்சி வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு கூட்டம் நடைபெற்றது. வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் சுதா மூர்த்தி தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் உறுப்பினர்கள் உலகநாதன், ரசூல் மைதீன், முகைதீன் அப்துல் காதர், சகாய ஜூலியட் மேரி, ஷர்மிளா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் தச்சநல்லூர் மாநகராட்சி பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு ரூ.30 லட்சம், மேலப்பாளையம் குறிச்சி பள்ளிக்கூடத்துக்கு கூடுதல் கட்டிடம், கழிவறை கட்டுவதற்கு ரூ.38 லட்சம் ஒதுக்கீடு செய்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story