டெய்லர் தற்கொலை
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் டெய்லர் தற்கொலை செய்து கொண்டார்.
சேலம்
அன்னதானப்பட்டி:-
சேலம் தாதகாப்பட்டி ஆறுமுகம் தெரு பகுதியைச் சேர்ந்த டெய்லர் சுரேஷ் (வயது 40). மனைவி விஜயா (30). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த வாரம் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த விஜயா ஜலகண்டாபுரத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷ் மன உளைச்சலில் இருந்து வந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுரேஷ் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story