ஏ.டி.எம்.மில் கிடந்த ரூ.10 ஆயிரத்தை ஒப்படைத்த டெய்லர்


ஏ.டி.எம்.மில் கிடந்த ரூ.10 ஆயிரத்தை  ஒப்படைத்த டெய்லர்
x

ஏ.டி.எம்.மில் கிடந்த ரூ.10 ஆயிரத்தை ஒப்படைத்த டெய்லருக்கு பாராட்டு.

திருப்பத்தூர்

ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் ஒரு தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்தில் நேற்று ஆம்பூர் அடுத்த குமாரமங்கலம் பகுதியை சேர்ந்த டெய்லர் குமாரவேல் என்பவர் பணம் எடுக்க வந்தார். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் வெளியே வந்து அப்படியே இருந்துள்ளது. இதனை கண்ட குமாரவேல் அங்குள்ள சிலரிடம் விசாரித்தார். ஆனால் யாரும் பணத்திற்கு உரிமை கோரவில்லை.

இதையடுத்து அந்த பணத்தை ஆம்பூர் நேதாஜி ரோட்டில் இயங்கி வரும் தனியார் வங்கியின் கிளைக்கு கொண்டு சென்று ஒப்படைத்தார். அவரை வங்கி மேலாளர் உள்ளிட்டார் பாராட்டினர்.


Next Story