மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட டீக்கடை ஊழியர் சிறையில் அடைப்பு
ஜெயங்கொண்டத்தில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட டீக்கடை ஊழியர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் நாகமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம். (வயது 38) இவர் ஜெயங்கொண்டம் தனியார் டீக்கடையில் வடை மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மது போதையில் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் ரகளையில் ஈடுபட்டதுடன் அந்த வழியாக சென்ற வாகனங்களை மறித்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா சோமசுந்தரம் பரிந்துரையின் பேரில் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்திய முருகானந்தத்தை ஜெயங்கொண்டம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story