டீக்கடைக்காரர் தற்கொலை
டீக்கடைக்காரர் தற்கொலை
சிவகங்கை
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்த திருவேகம்பத்தூர் ஆந்தகுடி கிராமத்தை சேர்ந்தவர் அழகர். இவரது மகன் திருநாவுக்கரசு(வயது 35). இவர் டீக்கடை நடத்தி வந்தார். இந்தநிலையில் இவர் விளாங்காட்டூர் ஊருணி அருகே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் தற்கொலை வழக்குபதிவு செய்து விசாரித்தனர். இந்தநிலையில் திருநாவுக்கரசு தந்தை அழகர், தனது மகன் சாவில் மர்மம் உள்ளதாவும், கடந்த 17-ந்தேதி தேவகோட்டையைச் சேர்ந்த 3 பேர் காரில் வந்து அழைத்து சென்றனர், அவர்கள் தான் திருநாவுக்கரசை கொலை செய்து தொங்க இருக்கலாம் என திருவேம்பத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில், திருநாவுக்கரசு கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story