விஷம் தின்று ஆசிரியர் தற்கொலை


விஷம் தின்று ஆசிரியர் தற்கொலை
x

விஷம் தின்று ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

உப்பிலியபுரம்:

ஆசிரியர்

உப்பிலியபுரம் ஒன்றியம், தளுகை ஊராட்சி மங்கப்பட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் பாரதிதாசன்(வயது 37). எம்.எஸ்சி. எம்.பில். முடித்துள்ள இவர், சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கோகிலவாணி(36). இவர் கல்லூரி விரிவுரையாளராக உள்ளார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லையே என்ற கவலையில் பாரதிதாசன் இருந்ததாக தெரிகிறது. இதனால் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த எலி பசையை (விஷம்) அவர் தின்றார்.

சாவு

இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த பாரதிதாசனை அக்கம், பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story