ஆசிரியர் கூட்டணி கூட்டம்
மறைஞாயநல்லூரில் ஆசிரியர் கூட்டணி கூட்டம் நடந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த மறைஞாயநல்லூரில் வட்டார தமிழக ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வட்டாரத் தலைவர் இந்திரசித்தன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் செந்தில்நாதன், மாவட்டச் செயலாளர் புயல்குமார், மாவட்ட பொருளாளர் மதியரசு, மாவட்ட மகளரணிச் செயலாளர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரச் செயலாளர் அண்ணாத்துரை தீர்மானங்களை விளக்கிப் பேசினார்.திருச்சியில் வருகிற பிப்ரவரி மாதம் நடைபெறும் ஜாக்டோ பவளவிழா எழுச்சி மாநாட்டில் திரளாக கலந்து கொள்ள வேண்டும். மாவட்ட கல்வி அலுவலகத்தில் நீண்ட காலமாக தேங்கிக்கிடக்கும் கோப்புகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அகஸ்தியன்பள்ளி - திருத்துறைப்பூண்டி அகல ரெயில்பாதை அமைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்று உள்ளது. விரைவில் இந்த வழித்தடத்தில் ரெயில் சேவையை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.