அரசு நிதி உதவி பள்ளிகளில் சம்பளம் வழங்கவில்லை வட்டார கல்வி அலுவலரிடம் ஆசிரியர்கள் முறையீடு
அரசு நிதி உதவி பள்ளிகளில் சம்பளம் வழங்கவில்லை வட்டார கல்வி அலுவலரிடம் ஆசிரியர்கள் புகார் கூறி முறையீடு அளித்துள்ளனர்.
ராணிப்பேட்டை
சோளிங்கர்
அரசு நிதி உதவி பள்ளிகளில் சம்பளம் வழங்கவில்லை வட்டார கல்வி அலுவலரிடம் ஆசிரியர்கள் புகார் கூறி முறையீடு அளித்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களுக்கு கடந்த ஜனவரி மாத சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் வட்டார கல்வி அலுவலகத்திற்கு சென்று வட்டார கல்வி அலுவலர் சிவராமனிடம் எங்களுக்கு ஏன் இன்று வரை சம்பளம் வழங்கப்படவில்லை, நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம், எங்களுக்கு சம்பளம் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முறையிட்டனர்.
அதன்பேரில் வட்டார கல்வி அலுவலர் சிவராமன் மேல் அதிகாரிகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வரும் வாரத்தில் சம்பளம் வழங்கப்படும் என்று கூறியதாக தெரிவித்தார்.
Related Tags :
Next Story