ஆசிரியர் தின விழா


ஆசிரியர் தின விழா
x

சுரண்டை பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது.

தென்காசி

சுரண்டை:

சுரண்டை எஸ்.ஆா். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் ஆசிரியா் தினவிழா கொண்டாடப்பட்டது. குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடாா் அறக்கட்டளை நிறுவனா் சிவபபிஸ்ராம் தலைமை தாங்கினார். பள்ளியின் செயலா் சிவடிப்ஜினிஸ்ராம், முதல்வா் பொன்மனோன்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியா் மாரிக்கனி வரவேற்றார். நிகழ்ச்சியில் மாணவா்களின் நடனம், பாடல், நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.

மாணவா்கள் ஜெனிஷ், சுபநந்தன் மற்றும் மாணவி முருகாஷினி ஆகியோா் ஆசிரியா் பணியின் சிறப்புகள் பற்றி எடுத்து கூறினர். மாணவி ஸ்ரீரக்ஷா மற்றும் மாணவன் குருஷித், சிவஅத்ரித்ராஜேந்திரன் ஆகியோர் ஆசிரியா் பணி குறித்து கவிதை பாடினர். மாணவி அஸ்விதா நன்றி கூறினார். மாணவி அழகு காா்த்திகா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தொடர்ந்து ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆசிரியைகள் வான்மதி, மொ்லின், ஆசிரியா் கோபால் செய்து இருந்தனர்.


Next Story