ஷெம்போர்டு பள்ளியில் ஆசிரியர் தின விழா


ஷெம்போர்டு பள்ளியில் ஆசிரியர் தின விழா
x

ஷெம்போர்டு பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.

திருப்பத்தூர்


வாணியம்பாடியை அடுத்த சின்ன கல்லுப்பள்ளியில் உள்ள ஷெம்போர்டு சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைவர் கே.எம்.சுப்பிரமணியம் தலைமை வகித்தார். முதல்வர் டாக்டர் ஆர். பிரசாந்த் வரவேற்றார். செயலாளர் ஆர்.கிருபாகரன், துணைத் தலைவர் கே.கனகராஜ், துணை செயலாளர் ஆர்.சிங்காரவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் தின விழாவையொட்டி டாக்டர் ராதாகிருஷ்ணன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாணவ -மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அனைத்து ஆசிரியர்களுக்கும் நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்கள்.

நிகழ்ச்சியில் வி.கே.ஆனந்த், டாக்டர் ஏ.வரதராஜ் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினார்கள். நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் ஆர்.இளங்கோ நன்றி கூறினார்.


Next Story