ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை-விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி நாள்


ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை-விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி நாள்
x
தினத்தந்தி 17 Jan 2023 12:15 AM IST (Updated: 17 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் மேல்நிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி மருதிபட்டி அம்பேத்கர் ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியர் பணியிடம், மாரியம்பட்டி, மருதிபட்டி, நெருப்பாண்ட குப்பம், கே.புதூர், மொண்டுக்குழி, கண்ணம்பள்ளி அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்கள், ராஜாபேட்டை அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியர் காலி பணியிடம் ஆகியவை நிரப்பப்பட உள்ளன. எனவே தகுதியானநபர்கள் உரிய கல்வித் தகுதி சான்றிதழ்களுடன் விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம். விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், தர்மபுரி-636705 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story