சாத்தான்குளத்தில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
சாத்தான்குளத்தில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சாத்த்தான்குளம்:
சாத்தான்குளம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டக்கிளையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவர் ரோஸ்லீன் அன்னலீலா தலைமை தாங்கினார். வட்டார துணைச் செயலர் பிரின்ஸ் ஜட்சன் வரவேற்றார். வட்டார செயலர் ஸ்டீபன்தாஸ் கோரிக்கையை விளக்கி பேசினார். இதில் கல்வி மாவட்ட செயலர் ராஜசேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜாண்சன் மாணிக்கத்துரை, மாநில செயற்குழு உறுப்பினர் அண்டனி சார்லஸ் ஆகியோர் பேசினர். இதில் வட்டார துணைத் தலைவர்கள் சாந்தி, வசந்தா, துணை செயலர் பாலமுருகன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தேவராஜன், ஜான் மனோகரன், முன்னாள் தலைமை ஆசிரியர் கஸ்பார்கனகராஜ், வட்டார செயற்குழு உறுப்பினர்கள் சாந்தி, ஜாய்ஸ் அமுதாராணி, ஆல்வீன், ஜோன்ஸ், கிங்ஸிலி, செல்வி, ககலைச்செல்வி, ஆழ்வார்திருநகரி வட்டார செயலர் மேரி அருள் செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வட்டார பொருளாளர் கீதா நன்றி கூறினார்.