ஆசிரியர்களுக்கு 'லீடு' மூலம் கற்றல், கற்பித்தல் பயிற்சி
காவனூர் இந்திரா நர்சரி, தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு ‘லீடு’ மூலம் கற்றல், கற்பித்தல் பயிற்சி அளிக்கப்பட்டது.
ராணிப்பேட்டை,
காவனூர் இந்திரா நர்சரி, தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு 'லீடு' மூலம் கற்றல், கற்பித்தல் பயிற்சி அளிக்கப்பட்டது.
திமிரி ஒன்றியம் காவனூரில் உள்ள இந்திரா நர்சரி மற்றும் தொடக்க பள்ளியில் இந்த ஆண்டு முதல் ரூ.10 லட்சம் செலவில் 'லீடு' மூலம் புதிய தொழில் நுட்பத்தில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி பள்ளி ஆசிரியர்களுக்கு 'லீடு' மூலம் கற்பிப்பதற்காக கற்றல், கற்பித்தல் பற்றிய ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடந்தது. பள்ளி நிர்வாகி ஆர்.சேட்டு தலைமை தாங்கினார். பள்ளி கணக்காளர் கே.லட்சுமி, எம்.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் எம்.கோபி வரவேற்றார். 'லீடு' பகுதி மேலாளர் எஸ்.காமராஜ் கலந்து கொண்டு, ஆசிரியர்களுக்கு கற்றல், கற்பித்தல் மற்றும் எளிமையான முறையில் ஆங்கிலம், கணிதம் பாடங்களை மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பது பற்றி பயிற்சி அளித்தனர். முடிவில் உதவி ஆசிரியை எஸ்.பிரேமலதா நன்றி கூறினார்.