சுட்டெரிக்கும் வெயிலால் கூடலூர் வனப்பகுதியில் காய்ந்து வரும் தேக்குமரங்கள்


சுட்டெரிக்கும் வெயிலால் கூடலூர் வனப்பகுதியில் காய்ந்து வரும் தேக்குமரங்கள்
x
தினத்தந்தி 30 March 2023 2:15 AM IST (Updated: 30 March 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

சுட்டெரிக்கும் வெயில் எதிரொலியாக கூடலூர் வனப்பகுதியில் தேக்குமரங்கள் காய்ந்து வருகின்றன.

தேனி

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கூடலூர், கம்பம், சின்னமனூர் ஆகிய 3 வனச்சரகங்களை கொண்ட வனப்பகுதி மேகமலை வன சரணாலயம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வனப்பகுதியில் யானை, புலி, மான், கரடி, காட்டுப்பன்றி, குரங்கு, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.

மேலும் அட்டவணை படுத்தப்பட்ட தேக்கு, தோதகத்தி, மருது, ரோஸ் உட் உள்ளிட்ட பல்வேறு மரங்களும், அரியவகை மூலிகை செடி, கொடிகளும் உள்ளன. இதுதவிர லோயர்கேம்பில் இருந்து குமுளிக்கு செல்லும் மலைப்பாதையில் லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையம் அருகில் இருந்து மாதா கோவில் வளைவு வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை சாலையோரம் வனத்துறையினர் அதிக அளவு தேக்குமரங்களை வளர்த்து, பாதுகாத்து வருகின்றனர்.

இந்தநிலையில் தற்போது கூடலூர் வனப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் தேக்கு மரங்களின் இலைகள் உதிர்ந்து மரங்கள் காய்ந்து போய் காட்சியளிக்கின்றன. அதேபோல் அடர்ந்த வனப்பகுதியிலும் மரங்கள் மற்றும் செடி, கொடிகள் காய்ந்து வருகின்றன.

இதனால் இந்த மரங்கள் தீவிபத்தில் சிக்கும் நிலை உள்ளது. அதேபோல் சமூக விரோதிகள் தீ வைக்க நேர்ந்தால் தேக்கு மரங்கள் எரிந்து நாசமாகிவிடும். எனவே வனத்துறையினர் தேக்கு மரங்களை பாதுகாக்க ரோந்து பணியில் ஈடுபடவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story