விழுப்புரத்தில்பா.ஜ.க. பேனர் கிழிப்புமறியல் செய்ய முயன்றவர்களால் பரபரப்பு


விழுப்புரத்தில்பா.ஜ.க. பேனர் கிழிப்புமறியல் செய்ய முயன்றவர்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 10 April 2023 12:15 AM IST (Updated: 10 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் பா.ஜ.க. பேனரை மர்ம நபர்கள் கிழித்துவிட்டனர். இதை கண்டித்து மறியல் செய்ய முயன்றவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்


வருகிற 14-ந்தேதி அம்பேத்கர் பிறந்த நாள் வர உள்ளதையொட்டி, விழுப்புரம் நகரில் பா.ஜ.க. சார்பில் பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதன்படி விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு முதல் பழைய பஸ் நிலையம் வரைக்கும் சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியன் சுவரில், பா.ஜ.க. சார்பில் பேனர் ஒட்டப்பட்டு உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் யாரோ மர்ம நபர்கள் அந்த பேனரை கிழித்து எறிந்துள்ளனர். இதை அறிந்த பா.ஜ.க. நிர்வாகிகள் நேற்று காலை நான்கு முனை சிக்னல் அருகே ஒன்று திரண்டனர்.

மறியலில் ஈடுபட முயற்சி

தொடர்ந்து, அவர்கள் அங்கு மறியலில் ஈடுபட முயன்றனர். இதுபற்றி அறிந்த விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், பேனர் கிழித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story