விதை பரிசோதனை நிலையத்தில் தொழில்நுட்ப ஆய்வு


விதை பரிசோதனை நிலையத்தில் தொழில்நுட்ப ஆய்வு
x

விதை பரிசோதனை நிலையத்தில் தொழில்நுட்ப ஆய்வு செய்யப்பட்டனர்.

திருச்சி

நெல்லை மாவட்ட விதை பரிசோதனை அலுவலர் ஆனந்தி ராதிகா, திருச்சி விதை பரிசோதனை நிலையத்தில் தொழில்நுட்ப ஆய்வு மேற்கொண்டார். அப்போது 2022-23-ம் ஆண்டு இலக்கு 4,200 விதை மாதிரிகள் பகுப்பாய்வு செய்வதற்கு, 4,454 விதை மாதிரிகள் பகுப்பாய்வு செய்து 372 விதை மாதிரிகள் தரமற்றவை என்று கண்டறியப்பட்டுள்ளதையும், 2023-24-ம் ஆண்டு இலக்கு 4,300 விதை மாதிரிகள் பகுப்பாய்வு செய்வதற்கு 304 விதை மாதிரிகள் பகுப்பாய்வு செய்து 34 விதை மாதிரிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்தார்.

மேலும் விதைப்பரிசோதனை நிலைய உபகரணங்கள் நல்ல நிலையில் இயங்குகிறதா எனவும், விதைகளின் தரத்தை அறிந்திட முளைப்புத்திறன், ஈரப்பதம், புறத்தூய்மை மற்றும் பிற கலப்பு ஆகிய பரிசோதனைகள் முறையாக ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய காலத்தில் விதைகள் கிடைத்திட பகுப்பாய்வு முடிவுகள் உடனுக்குடன் வழங்கப்படுகிறதா? என்றும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது திருச்சி விதை பரிசோதனை அலுவலர் அறிவழகன் மற்றும் விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர்கள் முத்துச்செல்வி, ரமாபிரபா நளினி ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story