விஷம் தின்று இளம்பெண் தற்கொலை


விஷம் தின்று இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 18 April 2023 12:29 AM IST (Updated: 18 April 2023 11:58 AM IST)
t-max-icont-min-icon

விஷம் தின்று இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்


விருதுநகர் அய்யனார் நகரை சேர்ந்தவர் மோகனலட்சுமி (வயது 47). இவரது மகள் காளீஸ்வரி (25). காளீஸ்வரிக்கும் விருதுநகர் அருகே உள்ள ஓ. கோவில்பட்டியை சேர்ந்த பிரசாந்த் வரதராஜ் என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. சம்பவத்தன்று காளீஸ்வரி தனது சகோதரியை செல்போனில் தொடர்பு கொண்டு தான் விஷப்பொடியை தின்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். உடனடியாக இதுகுறித்து காளீஸ்வரியின் கணவர் பிரசாத் வரதராஜுக்கு தகவல் தெரிவித்தவுடன் அவர் காளீஸ்வரியை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தார். அங்கு காளீஸ்வரியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி காளீஸ்வரியின் தாயார் மோகனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story