விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை


விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை
x

கள்ளிக்குடி அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை

திருமங்கலம்,

கள்ளிக்குடி அருகே உள்ள அரசபட்டி கிராமத்தை சேர்ந்தவர் தண்டிசுவரன். இவருடைய மனைவி பூசாமணி (வயது 24). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருமணமாகி 5 ஆண்டு ஆகிறது. பூசாமணி கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது சாணி பவுடரை(விஷம்) கரைத்துக் குடித்து விட்டார். இதனால் அவர் மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இந்த சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.


Related Tags :
Next Story