விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை


விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 8 Oct 2022 12:15 AM IST (Updated: 8 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கணவர் விவாகரத்து நோட்டீசு அனுப்பியதால் விரக்தி அடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து ெகாண்டார்.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

கணவர் விவாகரத்து நோட்டீசு அனுப்பியதால் விரக்தி அடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து ெகாண்டார்.

விவாகரத்து நோட்டீசு

வத்திராயிருப்பு அருகே கான்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மனைவி அமுதா (50). இவர்களுக்கு 6 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடிந்து கணவருடன் வசித்து வருகின்றனர்.

இவர்களது மகளான செல்லக்கனி(23)க்கு சாத்தூர் ரெட்டியபட்டியைச் சேர்ந்த முனீஸ்வரன் என்பவருடன் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இருவரும் சென்னையில் மளிகை கடை நடத்தி வந்தனர். குழந்தை இல்லாததால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் முனீஸ்வரன், வத்திராயிருப்பு அருகே உள்ள கான்சாபுரத்தில் உள்ள மாமியார் வீட்டில் செல்லக்கனியை விட்டுச் சென்றார். பின்னர் சாத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு முனீஸ்வரன் மனுதாக்கல் செய்துள்ளார்.இது தொடர்பாக விவாகரத்து நோட்டீசும் செல்லக்கனிக்கு அனுப்பி வைத்து உள்ளார்.

விஷம் குடித்து தற்கொலை

இதை அறிந்த செல்லக்கனி நேற்று முன்தினம் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனினும் சிகிச்சை பலனின்றி செல்லக்கனி இறந்தார். இதுகுறித்து செல்லக்கனியின் தாய் அமுதா கொடுத்த புகாரின் பேரில் கூமாப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


Related Tags :
Next Story