இளம்பெண் தீக்குளித்து தற்கொலை


இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
x

கள்ளக்குறிச்சி அருகே தொழிலாளிக்கு 2-வதாக திருமணம் செய்து வைத்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி,

விருப்பமில்லாமல் திருமணம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள கொங்கராயபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் ராமகிருஷ்ணன் (வயது 42). கூலி தொழிலாளி. ஏற்கனவே திருமணமான இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முடியனூர் கிராமத்தை சேர்ந்த துரைசாமி மகள் கவுசல்யா (22) என்பவரை 2-வது திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. கவுசல்யா விருப்பமில்லாமல் ராமகிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. திருமணம் ஆன நாள் முதல் கவுசல்யா அடிக்கடி தனக்கு வாழ பிடிக்க வில்லை என பெற்றோரிடம் கூறி வந்ததாக தெரிகிறது.

போலீசார் விசாரணை

இந்த நிலையில் சம்பவத்தன்று தாய் வீட்டுக்கு வந்திருந்த கவுசல்யா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடல் வெந்த நிலையில் வலியால் அலறிய கவுசல்யாவை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கவுசல்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கவுசல்யாவின் தாய் அஞ்சலை கொடுத்த புகாரின்பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story