தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை


தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
x

சிதம்பரம் அருகே கருவை கலைக்க கணவர் எதிர்ப்பு தெரிவித்ததால் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்

அண்ணாமலை நகர்,

சிதம்பரம் அருகே உள்ள கூத்தங்கோவில் தெற்கு அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (வயது 30). எலக்ட்ரீசியனான இவரும், அதே பகுதியை சேர்ந்த தில்லைக்கரசி (28) என்பவரும் காதலித்து கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் தில்லைக்கரசி மீண்டும் கர்ப்பமானார். இதனை விரும்பாத தில்லைக்கரசி, கருவை கலைத்து விடுவோம் என கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு கணவர் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்ததோடு, 3-வது குழந்தை பிறந்த பிறகு குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளலாம் என்று கூறினர்.

தற்கொலை

இதனால் மன உளைச்சலில் இருந்த தில்லைக்கரசி நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டுக்கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பாலாஜி குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே தில்லைக்கரசி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தற்கொலை செய்து கொண்ட தில்லைக்கரசிக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் சிதம்பரம் கோட்டாட்சியர் ரவியும் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story