நாகர்கோவிலில் கடன் தொல்லையால் இளம்பெண் தற்கொலை


நாகர்கோவிலில் கடன் தொல்லையால் இளம்பெண் தற்கொலை
x

நாகர்கோவிலில் கடன் தொல்லையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் கடன் தொல்லையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை

நாகர்கோவில் கீழ தத்தையார்குளத்தை சேர்ந்தவர் ஜோஸ் அமலன் (வயது 41), பெயிண்டர். இவரது மனைவி அனிதா (32). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் அமலன் செய்த தொழிலில் போதிய வருமானம் இல்லாததால், அவரது குடும்பம் வறுமையில் இருந்ததாக தெரிகிறது. எனவே அனிதா, சுயஉதவிக்குழுவின் மூலம் ஒரு தனியார் வங்கியில் பணம் கடன் வாங்கினார். பின்னர் வாங்கிய கடனை அனிதாவால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. இதற்கிடையே வங்கியில் இருந்து கடனை அடைக்கும் படி தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

கடனை அடைக்க முடியவில்லை என்ற மனவேதனையில் இருந்த அனிதா நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த கோட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story