குடும்ப தகராறில் எலி மருந்தை தின்ற இளம்பெண் சாவு


குடும்ப தகராறில் எலி மருந்தை தின்ற இளம்பெண் சாவு
x

விராலிமலை அருகே குடும்ப தகராறில் எலி மருந்தை தின்ற இளம் பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

புதுக்கோட்டை

விராலிமலை:

விராலிமலை மணமேட்டுப்பட்டியை சேர்ந்தவர் செல்வம் (வயது 55). இவரது மகள் சாந்தி (18). இவர், விராலிமலை அருகே உள்ள கோவில்காட்டுப்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த 9-ந் தேதியன்று சாந்தி தனது கணவர் ஆறுமுகத்திடம் வேலைக்கு செல்வதாக கூறியுள்ளார். அதில் உடன்பாடு இல்லாத ஆறுமுகம் தனது மனைவியிடம் வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சாந்தி வீட்டில் இருந்த எலி மருந்தை (விஷம்) தின்று வீட்டில் மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாந்தி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து செல்வம் கொடுத்து புகாரின் பேரில், விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story