கல்குவாரி நீரில் மூழ்கி வாலிபர் சாவு
கல்குவாரி நீரில் மூழ்கி வாலிபர் சாவு
விருதுநகர்
ராஜபாளையம்.
ராஜபாளையம் அருகே மேட்டு வடகரை பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் சுப்பிரமணியன் (வயது 25). இவர் நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள கல்குவாரி குளத்தில் குளிக்கச் சென்றார். பின்னர் நண்பர்களை விட்டு பிரிந்து அவர் மட்டும் குளித்து கொண்டிருந்தார்.
நீண்ட நேரம் ஆகியும் காணாததால் சுப்பிரமணியன் அண்ணன் முத்துராமலிங்கம் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கல்குவாரி நீரில் தேடினர். பின்னர் அவரை பிணமாக மீட்டனர். இதுகுறித்து கீழராஜகுலராமன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story