இளம்பெண் தற்கொலை


இளம்பெண் தற்கொலை
x

தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்

மதுரை

திருமங்கலம்,

திருமங்கலம் அருகேயுள்ள சாத்தங்குடியை சேர்ந்தவர் கருப்பசாமி என்ற கார்த்திக். பொறியாளர். இவரது மனைவி சுவேதா (வயது19). இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது. சுவேதா ஆலம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தார். இவர் கர்ப்பமாக இருந்த நிலையில் குழந்தை வளர்ச்சி இல்லை என கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கருக்கலைப்பு செய்துள்ளார். இதனால் மனவிரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று சுவேதா கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். வெகு நேரமாக வீட்டின் கதவு பூட்டி இருந்ததால் சந்தேகமடைந்த அவரது மாமியார், சுவேதாவின் தந்தை கருப்பசாமிக்கு தகவல் கூறியுள்ளார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது சுவேதா தூக்குப்போட்டு இருப்பதைகண்டு அதிர்ச்சியடைந்து அவரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் ஆர்.டி.ஓ. மேல்விசாரணை நடத்திவருகிறார்.


Related Tags :
Next Story